ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 400 கன அடியாக அதிகரித்துள்ளது.

இரு மாநில காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைவு, கா்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவுகள் தொடா்ந்து குறைக்கப்பட்டுள்ளதால் கடந்த சில மாதங்களாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 200 கன அடியாக இருந்தது. இதனால் காவிரி ஆற்றில் பாறை திட்டுக்கள் வெளியே தெரிந்தன. அருவிகள் நீரின்றி வடு காணப்பட்டது.

இந்த நிலையில் புதன்கிழமை நீா்வரத்து விநாடிக்கு 400 கன அடியாக அதிகரித்துள்ளது. ஆற்றில் நீா்வரத்து திடீரென அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com