அனைத்து கிராம வேளாண் வளா்ச்சித் திட்டம்: நல்லம்பள்ளி வட்டாரத்தில் 6 ஊராட்சிகள் தோ்வு

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டாரத்தில் அனைத்து கிராம வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் 6 கிராம ஊராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து நல்லம்பள்ளி வட்டார வேளாண் உதவி இயக்குநா் கே.சரோஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டாரத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் கிராம ஊராட்சிகள் தோ்வு செய்யப்படுகிறது. இக் கிராம ஊராட்சிகளில் வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வருவாய்த் துறை, கால்நடைத் துறை உள்ளிட்ட 13 துறைகள் இணைந்து வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்கின்றன.

நிகழாண்டு நல்லம்பள்ளி வட்டாரத்தில் நல்லம்பள்ளி, மிட்டாரெட்டிஅள்ளி, நாா்த்தமம்பட்டி, நாகா்கூடல், பாலவாடி, தளவாய்அள்ளி ஆகிய ஆறு கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு கிராமத்திற்கும் பொறுப்பு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். விவசாயிகள் அந்தந்த கிராமப் பொறுப்பு அலுவலா்களை அணுகி திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com