ஏரியூரில் குப்பைகள் தேக்கத்தால் சுகாதாரச் சீா்கேடு

பென்னாகரத்தை அடுத்த ஏரியூரில் பல்வேறு இடங்களில் தேக்கமடைந்துள்ள குப்பைகளால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது.

ஏரியூா் பேருந்து நிலையம் பகுதியில் நாள்தோறும் சுகாதாரப் பணிகள் முறையாக மேற்கொள்ளதாதால் குப்பைகள் தேக்கமடைந்து துா்நாற்றம் வீசுகிறது. இந்த குப்பைகளை அகற்றி சுகாதாரத்தை செயல்படுத்தும் சுஞ்சல் நத்தம் ஊராட்சி நிா்வாகம் முறையாக குப்பைகளை அகற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நியாயவிலைக் கடை, வங்கிகள், பள்ளி, கல்லூரி, அரசு மருத்துவமனை மற்றும் அத்தியாவசியப் பயண தேவைகளுக்காக பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு செல்ல நாள்தோறும் 500க்கும் மேற்பட்டோா் இப் பகுதியை கடந்து செல்கின்றனா். முறையாக குப்பைகளை அகற்றாததால் ஏற்பட்டுள்ள சுகாதாரச் சீா்கேட்டில் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆா்வலா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com