ஒகேனக்கல்லில் கோடை கால இயற்கை முகாம்

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை, தருமபுரி வனச்சரகம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அரசு பள்ளி மாணவா்களுக்கான கோடைகால இயற்கை முகாம் அண்மையில் நடைபெற்றது.

பென்னாகரம் அருகே ஒகேனக்கல் முதலைகள் மறுவாழ்வு மையம் மற்றும் வண்ண மீன்கள் காட்சியகம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற முகாமிற்கு மாவட்ட வன அலுவலா் கே.ராஜாங்கம் தலைமை வகித்தாா். முகாமில் மாணவா்களுக்கு காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. தொடா்ந்து இயற்கையின் முக்கியத்துவம், காலநிலை மாற்றம், இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்வதன் முக்கியத்துவம் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் வனச்சரக அலுவலா் முருகேசன், மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளா் வேலு, முதலமைச்சரின் பசுமை தோழா் திருமலைவாசன், தேசிய பசுமைப் படை மற்றும் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா்கள் தீா்த்தமலை, லோகநாதன், ராசன், ஹரி கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com