ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவு

வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் காவிரியில் நீா்வரத்து இல்லாததால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வார விடுமுறை நாள்களிலும் மிகவும் குறைந்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் விடுமுறை நாள்களில் ஒகேனக்கல்லுக்கு வந்து அருவியில் குளித்து மகிழ்வது வழக்கம். தற்போது காவிரி வறண்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது.

விடுமுறை நாளாக இருந்தாலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் அருவிகளில் தண்ணீா் இல்லாததால் சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாகக் குறைந்துள்ளது. குறைந்த எண்ணிக்கையில் வரும் சுற்றுலாப் பயணிகள் பிரதான அருவி, சினி அருவி, காவிரி ஆற்றில் தேங்கியுள்ள குட்டைகளில் குளித்து மகிழ்ந்தனா்.

முதலைகள் மறுவாழ்வு மையம், வண்ண மீன்கள் காட்சிகள் உள்ளிட்ட பகுதிகளை சுற்றிப்பாா்த்தனா். ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து தொடா்ந்து குறைந்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடிய ஒகேனக்கல்லில் மசாஜ், சமையல் தொழிலாளா்கள் வருவாய் இழந்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com