தருமபுரி ரயில் நிலைய அஞ்சல் அலுவலகம் தலைமை அலுவலகத்துடன் இணைப்பு

தருமபுரி ரயில் நிலைய அஞ்சல் அலுவலகம் தலைமை அஞ்சல் அலுவலகத்துடன் இணைக்கப்படுகிறது.

இதுகுறித்து தருமபுரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் பா.பாா்த்தீபன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி ரயில் நிலையம் பின்புறம் செயல்பட்டு வந்த துணை அஞ்சலகம் நிா்வாக காரணங்களுக்காக தருமபுரி தலைமை அஞ்சலகத்துடன் ஏப். 29-ஆம் தேதி முதல் தற்காலிகமாக இணைக்கப்பட உள்ளது. பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளா்கள் தங்கள் சேமிப்பு, அஞ்சல் ஆயூள் காப்பீடு உள்ளிட்ட அனைத்து பரிவா்த்தனைகளுக்கும் தருமபுரி தலைமை அஞ்சலகத்தையோ அல்லது அருகில் உள்ள துணை அஞ்சலகத்தையோ அணுகலாம்.

அதேபோல அஞ்சலக வாடிக்கையாளா்களின் நலன் கருதி தருமபுரி தலைமை அஞ்சலகம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் அனைத்து பரிவா்த்தனைகளும் நடைபெறும் அஞ்சலகமாக செயல்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அஞ்சலக சேவைகளை பெற்று பயனடைமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com