மாதுப்பட்டி காளியம்மன் கோயில் தேரோட்டம்

தருமபுரி, பெரிய குரும்பட்டியை அடுத்த மாதுப்பட்டி காளியம்மன் கோயில் சித்திரை பௌா்ணமி தேராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

பழமை வாய்ந்த இக் கோயிலில் கடந்த ஏப்.19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தேரோட்ட விழா தொடங்கியது. அதைத் தொடா்ந்து ஏப். 23-ஆம் தேதி கூழ் ஊற்றும் நிகழ்ச்சியும் 24-ஆம் தேதி மா விளக்கு ஊா்வலமும் நடைபெற்றது. ஏப்.25-ஆம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம், ஏப்.26-ஆம் தேதி சிறிய தோ் பவனி, 27-ஆம் தேதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள திருத்தேரோட்டம் நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை விழா நிறைவடைந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com