கோடை கால விளையாட்டுப் பயிற்சி முகாம் தொடக்கம்

தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கோடை கால பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

தருமபுரி: தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கோடை கால பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

தருமபுரி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு நடைபெற்ற இந்த முகாமை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் முத்துக்குமாா் தொடங்கி வைத்தாா்.

இந்த முகாமில் தடகளம், இறகுப் பந்து, கபடி, டேக்வாண்டோ, ஜிம்னாஸ்டிக் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் பயிற்சியளிக்கப்பட உள்ளது. வரும் மே 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த முகாமுக்கு, பயிற்சிக் கட்டணமாக ரூ. 200 பெறப்படுகிறது. இதில், முதல்நாளில் 152 மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com