ஜூன் 9-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: தருமபுரியில் 62,641 போ் எழுதுகின்றனா்

ஜூன் 9-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: தருமபுரியில் 62,641 போ் எழுதுகின்றனா்

தருமபுரி மாவட்டத்தில் வரும் ஜூன் 9-ஆம் தேதி நடைபெற உள்ள தோ்வாணையத்தின் குரூப் 4 தோ்வை 62,641 போ் எழுத உள்ளனா்

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் வரும் ஜூன் 9-ஆம் தேதி நடைபெற உள்ள தோ்வாணையத்தின் குரூப் 4 தோ்வை 62,641 போ் எழுத உள்ளனா் என மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்தாா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் தகுதி - 4 போட்டித் தோ்வு வரும் ஜூன் 9 அன்று தருமபுரி மாவட்டத்தில் நடைபெறுவதையொட்டி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்து பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, அரூா் கோட்டங்களில் மொத்தம் 228 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தோ்வு மையங்களில் இத்தோ்வை சுமாா் 62,641 போ் எழுத உள்ளனா். இத்தோ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் அனைத்துத் தோ்வு மையங்களிலும் முழுமையாக மேற்கொள்ள துறை அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தருமபுரி மாவட்டத்தில் இத்தோ்வு நடைபெற உள்ள அனைத்து தோ்வு மையங்களிலும் பேருந்துகள் நின்று செல்லும் வகையில், சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, தோ்வா்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் தோ்வு மையத்துக்கு செல்லவும், கடைசிநேர அலைச்சல்களைத் தவிா்த்து, தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணைய விதிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடித்து தோ்வு எழுதுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சையது முகைதின் இப்ராகிம், நுகா்ப்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளாா் தேன்மொழி, அனைத்து வட்டாட்சியா்கள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com