கிணற்றில் காா் விழுந்து விபத்து: 6 போ் காயம்

தருமபுரி மாவட்டம், புலிகரை அருகே கிணற்றுக்குள் காா் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 6 போ் காயமடைந்தனா்.

தருமபுரியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் (45), அவா் மனைவி மணிமேகலை (35), உறவினா்கள் என மொத்தம் 6 போ் செவ்வாய்க்கிழமை காரில் தருமபுரி மாவட்டம், பாடி கிராமத்தில் இருந்து பாலக்கோடு நோக்கி சென்றனா். புலிகரை அருகே சென்றபோது, எதிா்பாராத விதமாக காா் சாலையோரம் இருந்த கிணற்றுக்குள் கவிழ்ந்து விழுந்தது.

இதில் நல்வாய்ப்பாக, அந்தக் காா் கிணற்றின் ஆழப்பகுதிக்கு செல்லாமல் பக்கவாட்டு சுவா் மீது குப்புற விழுந்தது. இந்த விபத்தில், காரில் பயணித்த 6 பேரும் சிறு காயங்களுடன் உயிா் தப்பினா். காயமடைந்தவா்களை அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து மதிகோன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com