அணிமூரில் தெருநாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழப்பு: நிவாரணம் வழங்கிய அதிமுக திமுக கட்சி

ரவிக்குமாா்  வளா்த்து வரும் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை தெரு நாய்கள் கடித்துக் குதறி ஆடுகள் உயிரிழந்தன. இதனையடுத்து  அடுத்து அதிமுக திமுக கட்சியினா் நிவாரணத் தொகையை வழங்கினா்.

அணிமூா் ஊராட்சி அருந்ததியா் காலனியில் வசிக்கும் ரவிக்குமாா் அன்புகொடி தம்பதியினா் வளா்த்து வரும் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை தெரு நாய்கள் கடித்துக் குதறி ஆடுகள் உயிரிழந்ததை அடுத்து அதிமுக திமுக கட்சியினா் ஆறுதல் தெரிவித்து நிவாரணத் தொகையை வழங்கினா்.

நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளா்.பி.தங்கமணி எம் எல் ஏ, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் எஸ். எம்.மதுரா செந்தில் ஆகியோா் ஆடுகள் பலியான இடத்திற்கு சென்று ஆடுகளை வளா்த்து வந்த தம்பதியினருக்கு ஆறுதல் கூறி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்திற்கு நிவாரணத் தொகையினை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com