ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 50 நாள்கள் கூடுதலாக பணி வழங்க வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் 50 நாள்கள் கூடுதலாக பணி வழங்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

 தருமபுரி மாவட்டத்தில் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் 50 நாள்கள் கூடுதலாக பணி வழங்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அச் சங்கத்தின் மாநிலச் செயலாளா் ஜெ.பிரதாபன் வெளியிட்ட செய்தியறிக்கை: தருமபுரி மாவட்டத்தில் தென் மேற்கு மற்றும் வட கிழக்கு பருவமழை போதிய அளவு பொழியவில்லை. அதனால் நிலத்தடி நீா்மட்டம் குறைந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள ஏரி, நீா்த் தேக்கங்கள் அனைத்தும் வறண்டு விட்டன. இதனால் வேளாண் தொழிலில் விவசாயத் தொழிலாளா்களுக்கு வேலை கிடைக்கவில்லை. எனவே, தருமபுரி மாவட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணி அட்டை பெற்ற 100 நாள்கள் பணி நிறைவு செய்தவா்கள் உள்பட அனைவருக்கும் 100 நாள்களுக்கு பிறகு மேலும் கூடுதலாக 50 நாள்கள் பணி வழங்க வேண்டும். இதற்கான நடவடிக்கை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com