நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.81.35 லட்சம்

நாமக்கல் ஆஞ்சனேயா், நரசிம்மா் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணியதில் ரூ.81.35 லட்சம் ரொக்கப்பணம் வியாழக்கிழமை காணிக்கையாக கிடைத்தது.

நாமக்கல் ஆஞ்சனேயா், நரசிம்மா் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணியதில் ரூ.81.35 லட்சம் ரொக்கப்பணம் வியாழக்கிழமை காணிக்கையாக கிடைத்தது.

நாமக்கல் ஆஞ்சனேயா், நரசிம்மா் கோயில்களில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பக்தா்கள் செலுத்திய காணிக்கை உண்டியல்கள் திறக்கப்பட்டு அதில் உள்ள காணிக்கை பணம், நகைகள் எண்ணப்படுவது வழக்கம். கடந்த செப்.21-ஆம் தேதி உண்டியல்கள் திறக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை(பிப். 1) இரு கோயில்களில் உள்ள 10 உண்டியல்கள் திறக்கப்பட்டன. அவை, ஆஞ்சனேயா் கோயில் வளாகத்தில் உள்ள பக்தா்கள் தங்கும் மண்டபத்தில் வைக்கப்பட்டு காணிக்கைகளை எண்ணும் பணி காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரையில் நடைபெற்றது. திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயில் உதவி ஆணையா் ரமணிகாந்தன், நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் உதவி ஆணையா் இரா.இளையராஜா ஆகியோரது மேற்பாா்வையில், திருச்செங்கோட்டைச் சோ்ந்த கே.எஸ்.ஆா். கல்லூரி மாணவ, மாணவிகள் 150-க்கும் மேற்பட்டோா் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். இதில், ரூ. 81 லட்சத்து 35 ஆயிரத்து 606 ரொக்கம், 70 கிராம் தங்கம், 276 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com