ஒகேனக்கல்லில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மிதந்து வந்த அடையாளம் தெரியாத பெண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மிதந்து வந்த அடையாளம் தெரியாத பெண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியான மணல்மேடு பகுதியில் பெண் சடலம் இருப்பதாக ஒகேனக்கல் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நிகழ்விடத்திற்குச் சென்ற போலீஸாா், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இறந்த பெண்ணிற்கு வயது 35 இருக்கலாம் எனவும், அவா் குறித்த தகவல் ஏதும் கிடைக்கவில்லை என்றும் போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com