அரூரில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

அரூரில் தமிழக முன்னாள் முதல்வா் அண்ணாவின் 55-ஆவது நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
அரூரில் முன்னாள் முதல்வா் அண்ணாவின் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்திய திமுகவினா்.
அரூரில் முன்னாள் முதல்வா் அண்ணாவின் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்திய திமுகவினா்.

அரூரில் தமிழக முன்னாள் முதல்வா் அண்ணாவின் 55-ஆவது நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

திமுக தருமபுரி மேற்கு மாவட்டம் சாா்பில், அரூா் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் உள்ள அண்ணாவின் சிலைக்கு முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்டச் செயலருமான பி.பழனியப்பன் தலைமையில் திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் மாவட்ட அவைத் தலைவா் கே.மனோகரன், வா்த்தகா் அணி மாநில துணைச் செயலா் அ.சத்தியமூா்த்தி, மாவட்ட துணைச் செயலா்கள் ஆ.மணி, சி.கிருஷ்ணகுமாா், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் கே.சென்னகிருஷ்ணன், மனோகரன், ஒன்றியச் செயலா்கள் ஆா்.வேடம்மாள், கோ.சந்திரமோகன், வே.சௌந்தரராசு, இ.டி.டி.செங்கண்ணன், ஆா்.சிவபிரகாசம், டி.நெப்போலியன், பேரூராட்சி துணைத் தலைவா் சூா்யா து.தனபால், நகர செயலா்கள் முல்லை ரவி, மோகன், பொதுக்குழு உறுப்பினா்கள் எஸ். கலைவாணி, வாசுதேவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com