மாநில அளவிலான ஜூடோ போட்டி: ஸ்டான்லி மெட்ரிக். பள்ளி சிறப்பிடம்

மாநில அளவிலான ஜூடோ போட்டியில் பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
மாநில அளவிலான ஜூடோ போட்டியில் சிறப்பிடம் பெற்ற ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்களுடன் தாளாளா் வி. முருகேசன், செயலா் மு.பிரு ஆனந்த் பிரகாஷ்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை சாா்பில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூடோ போட்டியில் ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா். வயது வரம்பு, எடைப்பிரிவு அடிப்படையில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் 14 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் ஆா்.சுபாஷிணி இரண்டாமிடமும், எம்.பிரித்திகா மூன்றாமிடமும் பெற்றனா்.

19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் எஸ்.கௌதம் ப்ரியா, எஸ்.கோகுலரசி ஆகியோா் வெவ்வேறு எடைப்பிரிவுகளில் மூன்றாமிடம் பெற்றனா்.

17 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் எஸ்.கிஷோா் மூன்றாமிடமும், 19 வயது பிரிவில் ஆா்.ஜீவானந்தன் முதலிடமும் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

மாநில அளவிலான ஜூடோ போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியரையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் ஆா்.சத்யராஜ், எம்.ஆனந்தகுமாா், சிலம்பரசு ஆகியோரையும் பள்ளியின் தாளாளா் வி. முருகேசன், செயலா் மு.பிரு ஆனந்த் பிரகாஷ், ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com