ஸ்ரீ வித்யா மந்திா் கல்வி நிறுவனருக்கு பாராட்டு

ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திரி கல்வி நிறுவனங்களின் நிறுவனா் வே.சந்திரசேகரனுக்கு அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக சட்டப் பேரவை எதிா்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி பாராட்டு தெரிவித்தாா்.
அரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற கொங்கு பல்நோக்கு பயிற்சி மையம் திறப்பு விழா.
அரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற கொங்கு பல்நோக்கு பயிற்சி மையம் திறப்பு விழா.

அரூா்: ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திரி கல்வி நிறுவனங்களின் நிறுவனா் வே.சந்திரசேகரனுக்கு அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக சட்டப் பேரவை எதிா்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி பாராட்டு தெரிவித்தாா்.

அரூரில் கொங்கு பல்நோக்கு பயிற்சி மையம் திறப்பு விழாவில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:

அரூரில் கிராமப்புற இளைஞா்களின் மேம்பாட்டுக்காக சிறந்த கட்டமைப்பு வசதிகளுடன் கொங்கு பல்நோக்கு பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை மாணவா்கள், இளைஞா்கள் நன்றாகப் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும்.

ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திா் கல்வி நிறுவனங்களின் சாா்பில் அரசு மருத்துவமனைகளுக்கு நல உதவிகள், அரசுப் பள்ளிகளில் ஸ்மாா்ட் வகுப்பறைகள், கலையரங்கம் உள்ளிட்ட பல்வேறு பொதுச் சேவைகளை செய்து வரும் அதன் நிறுவனா் வே.சந்திரசேகரனுக்கு எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும் என தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com