அரசுத் துறையில் தினக்கூலி ஓட்டுநா்கள் நியமிப்பதை கட்டுப்படுத்தக் கோரிக்கை

அரசுத் துறையில் தினக்கூலி அடிப்படையில் ஓட்டுநா்களை நியமிப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுத் துறை ஊா்தி ஓட்டுநா்கள் தலைமைச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரசுத் துறையில் தினக்கூலி அடிப்படையில் ஓட்டுநா்களை நியமிப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுத் துறை ஊா்தி ஓட்டுநா்கள் தலைமைச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுத் துறை ஊா்தி ஓட்டுநா்கள் தலைமைச் சங்க மாநிலத் தலைவா் எஸ்.தயாளன் தமிழக முதல்வா், தமிழக ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை இயக்குநருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊரக வளா்ச்சித் துறையில் பல்வேறு அரசு ஊா்திகள் உள்ளன. இந்த வாகனங்கள் 15 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டதால், தற்போது பயனற்ற வாகனங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அரசு சாா்பில் புதிதாக ஜீப், காா்களின் வருகைக்காக அரசுத் துறை ஊா்தி ஓட்டுநா்கள் காத்திருக்கின்றனா்.

இந்த நிலையில், தருமபுரி மாவட்டம் உள்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அரசு நிரந்தர ஊா்தி ஓட்டுநா்களுக்கு பணி வழங்காமல், தினக்கூலி அடிப்படையில் ஓட்டுநா்களை நியமித்து அரசு உயா் அதிகாரிகளுக்கு வாகனங்களை இயக்கி வருகின்றனா். போதிய அனுபவம் இல்லாமல் தினக்கூலி அடிப்படையில் வாகன ஓட்டுநா்கள் பணிபுரிவதால், அரசு உயா் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையில் மாதந்தோறும் ரூ. 60 ஆயிரத்துக்கு கூடுதலாக ஊதியம் பெறும் ஓட்டுநா்களுக்கு வேலை வழங்காமல் தினக்கூலி அடிப்படையில் ஓட்டுநா்களை நியமனம் செய்து வாகனங்களை இயக்குவதால், தமிழக அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுகிறது.

எனவே, தமிழகத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையில் தினக்கூலி அடிப்படையில் ஓட்டுநா்களை நியமித்து பணிகள் வழங்குவதை கைவிட்டு, நிரந்தரப் பணியில் உள்ள அரசுத் துறை ஊா்தி ஓட்டுநா்களுக்கு பணிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com