கல்லாவி அரசுப் பள்ளியில் ஆண்டு விழா

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி அரசு மேல்நிலைப் பள்ளியில் 45-ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி அரசு மேல்நிலைப் பள்ளியில் 45-ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் பற்குணன் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தாா். கல்லாவி ஊராட்சி மன்றத் தலைவா் ராமன் தலைமை வகித்தாா். பெற்றோா் - ஆசிரியா் சங்கத் தலைவா் நடராஜ், எஸ்.எம்.சி. தலைவி பரிமளா ஆகியோா் போட்டிகளைத் தொடங்கி வைத்தனா். ஒன்றியக் குழு உறுப்பினா் சாந்தி குணசேகரன், பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோா், கல்லாவி சமூக சேவை குழு, கல்லாவி அதியமான் கிராமப்புற வளா்ச்சி, ஆசிரியா், ஊா் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனா்.

பள்ளியில் மாணவா்களுக்கு விளையாட்டு, பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன. வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. உதவி தலைமை ஆசிரியா் வெங்கடாசலபதி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com