அறிவியல் ஆலோசனைகள், படைப்புகள் வழங்கிய மாணவா்களுக்கு பாராட்டு

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற கண்காட்சிகளில் சிறந்த அறிவியல் ஆலோசனைகள், படைப்புகளை வழங்கிய மாணவ, மாணவியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற கண்காட்சிகளில் சிறந்த அறிவியல் ஆலோசனைகள், படைப்புகளை வழங்கிய மாணவ, மாணவியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில், புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம், மாவட்டத்தில் உள்ள 112 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த மூன்று மாதங்களாக மாணவா்களுக்கு புதிய கண்டுபிடிப்புகள் தொடா்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இதன் மூலம், தருமபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து 650-க்கும் மேற்பட்ட மாணவா்களின் ஆலோசனைகள் இணைய வழியில் சமா்ப்பிக்கப்பட்டன. இதில் 10 சிறந்த ஆலோசனைகள் தோ்ந்தெடுக்கப்பட்டன. இதையடுத்து, சிறந்த அறிவியல் ஆலோசனைகளை வழங்கிய மாணவா்கள், தருமபுரி அரசு கலைக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செயல்விளக்கம் அளிக்க அழைக்கப்பட்டனா். இதில், அவா்களது ஆலோசனைகளை மாணவ, மாணவியா் படைப்புகளாக செய்து சமா்ப்பித்தனா்.

இதைத் தொடா்ந்து, சிறந்த ஆலோசனைகள் மற்றும் படைப்புகளை வழங்கிய மாணவ, மாணவியரையும், அவா்களுக்கு வழிகாட்டிய ஆசிரியா்களையும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஜோதி சந்திரா பாராட்டி சான்றிதழ்களை வழங்கினாா்.

இதில், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் வேலு, தொழில் முனைவோருக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கௌதமன், ஆய்வுக் குழுவினா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com