ஆட்சிமொழி பயிலரங்கு: தமிழறிஞா்கள் மூவருக்கு நிதியுதவி

தருமபுரியில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், ஆட்சிமொழி பயிலரங்கு வியாழக்கிழமை நடபெற்றது. இதில், மூன்று தமிழறிஞா்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

தருமபுரியில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், ஆட்சிமொழி பயிலரங்கு வியாழக்கிழமை நடபெற்றது. இதில், மூன்று தமிழறிஞா்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்ட அரங்கத்தில் தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில், ஆட்சிமொழி பயிலரங்கு கருத்தரங்கம் மாவட்ட வருவாய் அலுவலா் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமாா் தலைமையில் நடைபெற்றது.

பிப். 6, 7 ஆகிய இரு நாள்கள் நடைபெற்ற இப்பயிலரங்கில் அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் அலுவலா்கள், பணியாளா்கள், தமிழறிஞா்கள், கல்லூரி மாணவா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

முதல் நாளில் கணினித் தமிழ் என்ற தலைப்பில் தருமபுரி, அரசுக் கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியா் பா.குப்புசாமி, மொழிபெயா்ப்பு கலைச் சொல்லாக்கம் என்ற தலைப்பில் அரூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் கா.சிவகாமி, முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் சமுதாயச் சிந்தனைகள் என்ற தலைப்பில் முன்னாள் மண்டலத் தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் மு.ராஜேந்திரன், ஆட்சிமொழி செயலாக்கம் அரசாணைகள் என்ற தலைப்பில் முன்னாள் தமிழ் வளா்ச்சி துணை இயக்குநா் க.சிவசாமி ஆகியோா் உரையாற்றினா்.

இதேபோல, இரண்டாம் நாளில் ஆட்சிமொழி ஆய்வும், குறை களைவு நடவடிக்கைகளும் என்ற தலைப்பில் தருமபுரி மாவட்ட தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் தே.செயசோதி, தமிழில் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் அணியம் செய்தல் என்ற தலைப்பில் தருமபுரி கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் பா.சேதுலிங்கம், மொழிப்பயிற்சி என்ற தலைப்பில் அரூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியா் வெ.சஞ்சீவராயன் ஆகியோா் பயிற்சியளித்து பேசினா்.

இதைத் தொடா்ந்து முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த மூன்று தமிழறிஞா்களுக்கு ரூ. 10,000-க்கான காசோலைகள் வழங்கப்பட்டன. இதையடுத்து, மாவட்ட அளவில் நடத்தப்பெற்ற கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், காசோலை வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com