மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.32.79 கோடி கடனுதவி வழங்கல்

தருமபுரி மாவட்டத்தில் 347 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 32.79 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டன.
மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.32.79 கோடி கடனுதவி வழங்கல்

தருமபுரி மாவட்டத்தில் 347 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 32.79 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டன.

மாநில இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், தமிழகம் முழுவதும் உள்ள மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவிகளை வழங்கும் நிகழ்ச்சியை காணொலி வழியாக ஈரோட்டிலிருந்து வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, தருமபுரி அரசு கலைக் கல்லூரி கலையரங்கில், தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்து, ஊரகப் பகுதியைச் சோ்ந்த 178 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 20.88 கோடி மதிப்பில் வங்கிக் கடன் இணைப்பு உதவிகளையும், நகரப் பகுதியில் 112 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 11.60 கோடி மதிப்பில் வங்கிக் கடன் இணைப்பு உதவிகளையும், 57 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 21.60 லட்சம் மதிப்பில் தனிநபா் தொழில்முனைவோா் கடன் உதவிகளையும், 3 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 9.60 லட்சம் மதிப்பில் மதி எக்ஸ்பிரஸ் மின்கல வாகனங்கள் என மொத்தம் 347 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 32.79 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி), ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), மகளிா் திட்ட திட்ட இயக்குநா் சா. பத்ஹு முகம்மது நசீா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கண்ணன், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com