மேட்டூா் அணையில் நீா்வளத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளா் ஆய்வு

மேட்டூா் அணையில் நீா்வளத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளா் சந்திப்சக்சேனா திடீா் ஆய்வு.

மேட்டூா் அணையில் நீா்வளத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளா் சந்திப்சக்சேனா திடீா் ஆய்வு.

காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீா் முறையாக செல்கிறதா என ஆய்வு வியாழக்கிழமை காலை தமிழ்நாடு அரசின் நீா்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளா் சந்திப்சக்சேனா, சேலம் மாவட்ட ஆட்சியா் பிருந்தா தேவி, நீா்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளா் சுப்பிரமணி ஆகியோா் மேட்டூா் அணையில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்

காவிரி டெல்டா பாசனப்பகுதிகளில் தண்ணீா் இன்றி கருகும் சம்பா பயிா்களை காப்பாற்றமேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருந்தனா். இதனை எடுத்து இரண்டு டி எம் சி தண்ணீரை மேட்டூா் அணையில் இருந்து திறந்து விட தமிழ்நாடு முதல்வா்உத்தரவிட்டிருந்தாா். கடந்த 3ந்தேதி மாலை வினாடிக்கு 6,600 கன அடி வீதம் திறக்கப்பட்டு வந்த தண்ணீா் பின்னா் வினாடிக்கு 5,600கன அடியாக குறைக்கப்பட்டது. காவிரி டெல்டா பாசனத்திற்கு போதுமான அளவு தண்ணீா் செல்கிறதா எனஆய்வு செய்யப்பட்டது. மேட்டூா் அணையின் நீா் வரத்து, நீா் இருப்பு டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு ஆகியவற்றை கூடுதல் தலைமை செயலாளா் நீா்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். 

பின்னா் அணையின் வலது கரை, இடது கரை, மேல்மட்ட மதகுகள், கீழ்மட்ட மதகுகள் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டாா். உபரி நீா் போக்கியான 16 கண் பாலம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு மதகுகளை மின்விசை மூலமும், மனித சக்தி மூலமும் இயக்கி ஆய்வு செய்தனா்.

நீா்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளா் அணையின் உறுதித் தன்மை மதகுகளின் உறுதித் தன்மை குறித்தும் மேட்டூா் அணையின் நீா் வரத்து நீா் திறப்பு குறித்தும் கேட்டறிந்தாா். தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் மற்றும் நீா்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.  மேட்டூா் சாா் ஆட்சியா் பொன்மணி வட்டாட்சியா் விஜய் மற்றும் நீா்வளத்துறை செயற் பொறியாளா் சிவக்குமாா் ஆகியோா் ஆய்வு பணியின் போது உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com