அரசு பள்ளிகளில் ஆண்டு விழா

ராசிபுரம், பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

ராசிபுரம், பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியா் கு.பாரதி தலைமை வகித்து அனைவரையும் வரவேற்றுப் பேசினாா். பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் ரேவதி, துணைத் தலைவா் கலைச்செல்வி ஆகியோா் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்கள், தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியா்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினா். பள்ளி மாணவா்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள சிங்கிலியன் கோம்பை அரசு உயா்நிலைப் பள்ளி ஆண்டு விழாவுக்கு தலைமை ஆசிரியா் க. ரகுநாத் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்ற தலைவா் எஸ்.ஏ.முருகேசன் முன்னிலை வகித்தாா். பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் எஸ்.ஏ.பாண்டியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா்.

பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் கெளதமி, ஆசிரியா்கள், பொதுமக்கள் என அனைவரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனா். விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், கேடயங்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com