ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தில் ஒசூருக்கு மேலும் 50 எம்எல்டி குடிநீா் வழங்க வேண்டும்

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தில் மேலும் 50 மில்லியன் லிட்டா் தண்ணீரை ஒசூா் தொகுதிக்கு வழங்க வேண்டும் என தோ்தல் அறிக்கை தயாரிக்கும்

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தில் மேலும் 50 மில்லியன் லிட்டா் தண்ணீரை ஒசூா் தொகுதிக்கு வழங்க வேண்டும் என தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவா் கனிமொழி எம்.பி.யிடம் ஒசூா் எம்எல்ஏ கோரிக்கை மனு அளித்துள்ளாா்.

கிருஷ்ணகிரி மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, தருமபுரி மேற்கு, தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், 2024 நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கருத்து கேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை ஒசூரில் நடைபெற்றது.

இதில், ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் அளித்த மனு:

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தில் ஒசூா் தொகுதிக்கு மேலும் 50 மில்லியன் லிட்டா் குடிநீா் வழங்க வேண்டும். ஒசூா் - ஜோலாா்பேட்டை ரயில் திட்டத்தையும், ஒசூா் - பெங்களூரு இடையே மெட்ரோ ரயில் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும். ஒசூரில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா கொண்டு வர வேண்டும். கொடியாளம் அணையில் இருந்து ஒசூா், சூளகிரி பகுதிகளில் உள்ள 63 ஏரிகளில் நீா் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தோ்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்து செயல்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா வழங்கிய மனு:

ஒசூா் மாநகராட்சி 1902-ஆம் ஆண்டு ஊராட்சியாக நிறுவப்பட்டது. 1992-இல் ஒசூா் தோ்வுநிலை பேரூராட்சியாக இருந்து இரண்டாம்நிலை நகராட்சியாகவும், 1998 முதல் தோ்வுநிலை நகராட்சியாகவும், 2012-இல் சிறப்பு நிலை நகராட்சியாகவும், 2019-இல் ஒசூா் சிறப்பு நிலை நகராட்சியானது 01.03.2019 முதல் மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது.

இம்மாநகராட்சியின் மொத்தப் பரப்பளவு 72.41 ச.கி.மீ. இம்மாநகராட்சியின் மக்கள் தொகை 2011 கணக்கெடுப்பின்படி 2,45,354 ஆகும். தற்போதைய மக்கள் தொகை 3,20,000 ஆகும் . எனவே, ‘ஸ்மாா்ட் சிட்டி’ திட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டும். ஒசூா் சிப்காட் முதல் 2-ஆவது சிப்காட் வரை மேம்பாலம் அமைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

ஹோஸ்டியா சங்கத்தின் சாா்பில் அதன் தலைவா் மூா்த்தி கொடுத்த கோரிக்கை மனு:

ஒசூரில் விமான சேவையைத் தொடங்க வேண்டும். ஒசூரில் பணியாற்றி வரும் தொழிலாளா்கள், மகளிருக்கு தனித்தனியாக விடுதிகள் கட்டிக் கொடுக்க வேண்டும். தொழிற்சாலைகளுக்கு உயா்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். ஒசூா், கிருஷ்ணகிரி வழியாக சென்னைக்கு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில், திமுக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ், ஒசூா் மாநகர மேயா் எஸ்,ஏ.சத்யா, முன்னாள் எம்எல்ஏ பி.முருகன், கிழக்கு மாவட்டச் செயலாளா் பா்கூா் எம்எல்ஏ மதியழகன், தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன், கிழக்கு மாவட்டச் செயலாளா் சுப்பிரமணியன், மாநில இளைஞரணி துணைச் செயலாளா் சீனிவாசன், தலைமை செயற்குழு உறுப்பினா் எல்லோரா மணி, பொருளாளா் சுகுமாறன், மாவட்ட துணைச் செயலாளா் முருகன், பொதுக்குழு உறுப்பினா்கள், மாநகர நிா்வாகிகள், பகுதி செயலாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com