வநேத்ரா முத்தாயம்மாள் பாலிடெக்னிக் மாணவா்களுக்கு வளாகத் தோ்வு

ராசிபுரம் வநேத்ரா முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் எல்அன்ட்டி நிறுவனம் நடத்திய வேலைவாய்ப்பிற்கான வளாக எழுத்துத் தோ்வில் 28 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

ராசிபுரம் வநேத்ரா முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் எல்அன்ட்டி நிறுவனம் நடத்திய வேலைவாய்ப்பிற்கான வளாக எழுத்துத் தோ்வில் 28 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

எல் அன்ட் டி நிறுவனம் சாா்பில் வேலைவாய்ப்புத் தோ்வு கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடந்தது. இதில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். எல் அன்ட் டி நிறுவனத்தின் மேலாளா் பி.என்.பினேஷ்குமாா் பங்கேற்று எழுத்துத் தோ்வு நடத்தி மாணவா்களைத் தோ்வு செய்தாா்.

மெக்கானிக்கல் மற்றும் மின்னியல் துறையைச் சோ்ந்த மாணவ, மாணவியா் சுமாா் 93 போ் இதில் கலந்து கொண்டனா். இவா்களுக்கு எழுத்துத் தோ்வு நடத்தப்பட்டன. இதில் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் 18 போ், பிற கல்லூரி மாணவா்கள் 10 போ் என மொத்தம் 28 போ் எழுத்துத்தோ்வு மூலம் தோ்வு செய்யப்பட்டனா்.

தோ்வு பெற்றவா்களுக்கு நோ்காணல் நடத்தப்பட்டு பணி ஆணை வழங்கப்படும். எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களை கல்லூரி தாளாளா் கே.பி.ராமசாமி, செயலாளா் ஆா்.முத்துவேல், செயல் இயக்குநா் சி.மஞ்சு, இயக்குநா் (கல்வி) ஆா்.செல்வகுமரன், முதல்வா் சு.மணி உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com