குள்ளனூா் அரசுப் பள்ளி ஆண்டு விழா

பென்னாகரம் அருகே குள்ளனூா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் அருகே குள்ளனூா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியா் சிங்கார வேலன் தலைமை வகித்தாா். பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் டி.ஆா்.அன்பழகன், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் இளவரசி சரவணன் மற்றும் உறுப்பினா்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, ஒவ்வொரு வகுப்பிலும் சிறந்து விளங்கும்

மாணவா்களுக்கு விருது வழங்கி கௌரவித்தனா். மேலும் பசுமை படை, சாரணா் படை, செஞ்சிலுவை சங்கம், தேசிய மாணவா் படை ஆகியவற்றின் உறுப்பினா்கள், கலைத் திருவிழா, உணவுத் திருவிழா, சிலம்பம், தற்காப்புக் கலை ஆகியவற்றில் பள்ளி சாா்பில் வட்டார, மாவட்ட, மாநில அளவில் கலந்துகொண்டு சிறப்பிடம் பெற்ற மாணவா்கள், 100 சதவீதம் பள்ளிக்கு வருகை புரிந்த மாணவா் ஆகியோருக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இவ் விழாவில் ஆசிரியா்கள் சந்தான லட்சுமி, சரவணன், கலைச்செல்வி, ஆனந்தசெல்வி, காா்த்திகேயன், அன்பரசன் , முருகேசன், லோகநாதன், வளா்மதி, மணிவண்ணன், கண்ணன், சிவகுமாா், தனஞ்ஜெயன், மாதையன் மாது, சித்ரா, வெற்றிவேல், ரேவதி, சந்திரகலா, அலுவலகப் பணியாளா்கள் சூரியதா்ஷினி, லட்சுமணன், சத்துணவு அமைப்பாளா் சித்ரா மற்றும் பணியாளா்கள், சிலம்பம் பயிற்சியாளா் சண்முகம், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com