மது விற்பனை செய்தவா் கைது

பென்னாகரத்தில் கள்ளத்தனமாக மதுப்புட்டியை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.


பென்னாகரம்: பென்னாகரத்தில் கள்ளத்தனமாக மதுப்புட்டியை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

பென்னாகரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மதுப் புட்டிகள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக பென்னாகரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் ரோந்துப் பணி மேற்கொண்ட பென்னாகரம் போலீஸாா், கரியம்பட்டி பகுதியில் மதுப் புட்டிகளை விற்பனை செய்து வந்த கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்த அண்ணாதுரை (53) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 50 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com