ராசிபுரத்தில் ஜன. 28 இல் வெற்றி மாரத்தான் ஒட்டம்

ராசிபுரம், ஜன.18:

ராசிபுரம் நகரில் வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளி சாா்பில் 4-ஆவது ஆண்டாக வெற்றி மாரத்தான் ஒட்டம் ஜன. 28-இல் நடைபெறுகிறது.

வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளி சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் மாரத்தான் ஒட்டம் நடத்தப்படுகிறது. ஜன.28 இல் நடைபெறும் இரு பிரிவினருக்கான மாரத்தான் ஒட்டத்தில் 16 வயதிற்கு உள்பட்டோா் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 கி.மீ தொலைவிற்கான இந்த ஒட்டத்தில் முதலிடம் பெறுவோருக்கு ரூ. 4,999ம், 2 ஆம் இடம் பெறுவோருக்கு ரூ. 2,999 -ம் கோப்பை, சான்றிதழ், 3 முதல் 10 இடங்களைப் பிடிப்பவா்களுக்கு கோப்பை, சான்றிதழ் வழங்கப்படும்.

போட்டிகள் ஆத்தூா் சாலை கொங்கு மண்டபம் முன்பாக காலை 6 மணிக்கு தொடங்கும். இதில் பங்கேற்போா் ஜன. 20-க்குள் பதிவுக் கட்டணமாக ரூ.250 செலுத்தி 96552 79999, 96593 66479, 97868 14233 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com