பரமத்தி வேலூரில் ரூ. 3.23 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 3 லட்சத்து 23 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.

பரமத்தி வேலூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 3 லட்சத்து 23 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.

பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து, அதை உலா்த்தி வியாழக்கிழமை தோறும் பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனா். இங்கு தரத்திற்கு தகுந்தாா் போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற மின்னணு ஏலத்திற்கு 7 ஆயிரத்து 304 கிலோ கொப்பரைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.

அதிகபட்சமாக கிலோ ரூ. 88.18-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 56.89-க்கும், சராசரியாக ரூ. 79.09-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 5 லட்சத்து 67 ஆயிரத்து 131- க்கு விற்பனை நடைபெற்றது. வியாழக்கிழமை (ஜன.18) நடைபெற்ற ஏலத்திற்கு 4 ஆயிரத்து 255 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். அதிகபட்சமாக கிலோ ரூ. 70-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 54.19-க்கும், சராசரியாக ரூ. 66.39-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 3 லட்சத்து 23 ஆயிரத்து 398-க்கு ஏலம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com