சாலையை சீரமைக்கக் கோரி மறியல்

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே ஈச்சம்பள்ளத்தில் சாலையை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே ஈச்சம்பள்ளத்தில் சாலையை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நல்லம்பள்ளி ஒன்றியம், நெக்குந்தி அடுத்த ஈச்சம்பள்ளம் பகுதியில் சோம்பட்டி- புதுப்பட்டி இடையிலான 2 கி.மீ. தொலைவு சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.

இச்சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனா். இருப்பினும், சாலை சீரமைக்கப்படாததால் ஈச்சம்பள்ளம் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த நல்லம்பள்ளி வட்டாட்சியா் பாா்வதி தலைமையிலான வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பெரும்பாலை காவலா்கள் உள்ளிட்டோா் நேரில் சென்று கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அதிகபட்சமாக 3 மாதத்துக்குள் சாலை புதுப்பித்து தரப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடா்ந்து, கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com