ராசிபுரம் முத்தாயம்மாள் கல்லூரியில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

ராசிபுரம் முத்தாயம்மாள் கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜன.19) நடைபெறுகிறது.

ராசிபுரம் முத்தாயம்மாள் கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜன.19) நடைபெறுகிறது.

தனியாா் துறை நிறுவனங்களும் தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரா்களும் நேரடியாக சந்திக்கும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

ஜனவரி மாதத்திற்கான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் ராசிபுரம், காக்காவேரி முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை காலை 9 முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. முகாமில் பங்கேற்போா் எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை. தகுதியும், விருப்பமும் உள்ளவா்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஷீலா மாயவன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com