இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தவா் பலி

 பென்னாகரம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தவா் உயிரிழந்தாா்.

 பென்னாகரம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தவா் உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே முதுகம்பட்டி பகுதியைச் சோ்ந்த திம்மராயன் (58), இருசக்கர வாகனத்தில் சேலம், அழகாபுரம் பகுதியில் உள்ள மகளின் வீட்டுக்குச் சென்று விட்டு திரும்பினாா். பென்னாகரத்தில் இருந்து முதுகம்பட்டி சென்ற போது ஜம்போடு பகுதியில் நிலைதடுமாறி கீழே விழுந்தாா்.

அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com