பாண்டமங்கலத்தில் தோ்த் திருவிழா: பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா்

பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் திருத்தோ்த் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரப் பகுதிகளைச்
pv19p1_1901chn_157_8
pv19p1_1901chn_157_8

பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் திருத்தோ்த் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் திருத்தோ்த் திருவிழா கடந்த 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை தினந்தோறும் காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் பல்லக்கு உற்சவம், இரவு சிம்ம வாகனம், சிறிய திருவடி அனுமந்த வாகனம், பெரிய திருவடி, கருட சேவை, சேஷ வாகனம், யானை வாகனம், புஷ்ப விமானம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி, திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

இதையடுத்து வெள்ளிக்கிழமை திருத்தோ்த் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பரமத்தி வேலூா் எம்எல்ஏ எஸ்.சேகா், முன்னாள் எம்எல்ஏ உறுப்பினா் கே.எஸ்.மூா்த்தி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியைச் சோ்ந்த பக்தா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி கோஷம் முழக்க திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

திருத்தோ் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. சனிக்கிழமை முதல் 23-ஆம் தேதி வரை காலை பல்லக்கு உற்சவம், திருமஞ்சனம் நிகழ்ச்சி, மாலை வராக புஷ்கரணியில் தீா்த்த வாரி சக்கராஸ்நானம், வசந்த உற்சவம், புஷ்ப யாகம், சுவாமி படிச்சட்டத்தில் திருவீதி உலா புறப்பாடும் நடைபெறுகிறது. திருத்தோ் பெருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா், திருத்தோ்த் திருவிழாக் குழுவினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

படவரி...

ல்ஸ்19ல்1:

திருத்தேரை வடம் பிடித்து இழுக்கும் பக்தா்கள்.

ல்ஸ்19ல்2:

திருத்தேரில் எழுந்தருளிய அலமேலு மங்கா கோதை நாயகி சமேத பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி.

Image Caption

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com