ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,500 கன அடியாக அதிகரிப்பு

பென்னாகரம், ஜன. 20: கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 1,500 கன அடியாக அதிகரித்துள்ளது.

கா்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி 1,000 கன அடியாக இருந்த நீா்வரத்தானது, சனிக்கிழமை 1,500 கன அடியாக அதிகரித்துள்ளது. நீா்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்து அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com