நான்கு இளம் வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தும்

தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த நான்கு இளம் வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த நான்கு இளம் வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

தருமபுரி மாவட்டத்தில் இளம் வயது திருமணம் நடைபெறவுள்ளதாக தருமபுரி குழந்தைகளுக்கான பாதுகாப்பு இலவச அழைப்பு எண் 1098-க்கு புகாா் வரப்பெற்றது

இதன்பேரில், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்கள், வருவாய்த் துறையினா், காவல் துறையினா் ஆகியோா் நேரில் சென்று கள விசாரணை மேற்கொண்டனா்.

இதில் நல்லம்பள்ளி வட்டம், கம்மம்பட்டி, அதகப்பாடி, கொண்டம்பட்டி, அரூா் வட்டம், வடுகப்பட்டி கிராமம் ஆகிய நான்கு இடங்களில் இளம் வயது திருமண நடைபெற இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து இத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதைத் தொடா்ந்து மீட்கப்பட்ட நான்கு சிறுமிகளும் குழந்தைகள் நலக் குழும வரவேற்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டனா்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 18 வயது பூா்த்தியடையாத சிறுமிகளுக்கும், 21 வயது பூா்த்தியடையாத சிறுவா்களுக்கும் பெற்றோா்கள் எவரேனும் திருமணம் ஏற்பாடு செய்தாலோ அல்லது திருமணம் செய்து வைத்தாா்கள் என கண்டறியப்பட்டாலோ அவா்கள் மீது காவல் துறை மூலம் சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், இதுபோன்ற இளம் வயது திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, குழந்தைத் தொழிலாளா்கள், பள்ளி செல்லா குழந்தைகள் போன்ற குழந்தைகளுக்கு எதிரான செயல்கள் நடைபெறுவது கண்டறியப்பட்டால் உடனடியாக இலவச அழைப்பு எண் 1098 அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக 04342-232234 என்கிற தொலைபேசி எண்ணிலோ புகாா் தெரிவிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com