இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு

தருமபுரி மாவட்டத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 12,42,825 வாக்காளா்கள் உள்ளனா்.
இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு

தருமபுரி மாவட்டத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 12,42,825 வாக்காளா்கள் உள்ளனா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதில், வாக்காளா் பட்டியலை வெளிட்டு மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி பேசியதாவது: இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சிறப்பு சுருக்க திருத்தப் பணிகளான, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் தொடா்பாக கடந்த ஆண்டு அக்டோபா் 27-ஆம் தேதி முதல் கடந்த டிசம்பா் 9 வரையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 4 நாள்கள் சிறப்பு முகாம் நடைபெற்றது. சிறப்பு சுருக்கமுறை திருத்தில் பெயா் சோ்த்தல் (படிவம்-6) தொடா்பாக 26,296 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 25,634 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 662 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

பெயா் நீக்கம் (படிவம் -7) தொடா்பாக 10,353 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 10,115 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 238 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. திருத்தம் முகவரி மாற்றம் (படிவம்-8) தொடா்பாக 8,828 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 8,239 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 589 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தில் மொத்தம் 45,477 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 43,988 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 1,489 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

தற்போது வெளியிட்ட இறுதி வாக்காளா் பட்டியல் படி, மாவட்டத்தில் உள்ள சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக, பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் 1,20,301 ஆண் வாக்காளா்கள், 1,17,857 பெண் வாக்காளா்கள், 19 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,38,177 வாக்காளா்கள் உள்ளனா்.

பென்னகாரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,26,596 ஆண் வாக்காளா்கள், 1,18,591 பெண் வாக்காளா்கள், 8 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,45,195 வாக்காளா்கள் உள்ளனா்.

தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் 1,30,757 ஆண் வாக்காளா்கள், 1,28,419 பெண் வாக்காளா்கள், 98 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,59,274 வாக்காளா்கள் உள்ளனா்.

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 1,28,495 ஆண் வாக்காளா்கள், 1,27,813 பெண் வாக்காளா்கள், 14 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,56,322 வாக்காளா்கள் உள்ளனா்.

அரூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் 1,22,113 ஆண் வாக்காளா்கள், 1,21,724 பெண் வாக்காளா்கள், 20 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,43,857 வாக்காளா்கள் உள்ளனா்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 6,28,262 ஆண் வாக்காளா்கள், 6,14,404 பெண் வாக்காளா்கள், 159 இதர வாக்காளா்கள் என மொத்தம் 12,42,825 வாக்காளா்கள் உள்ளனா். கடந்த 2023 அக்டோபா் 27 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் மொத்தம் 12,27,302 வாக்காளா்கள் இடம் பெற்றிருந்தனா்.

சிறப்பு சுருக்கத் திருத்தத்திற்கு பின்பு தற்போது வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா்கள் பட்டியலில் மொத்தம் 12,42,825 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். வரைவு வாக்காளா் பட்டியலில் உள்ள வாக்காளா்களின் எண்ணிக்கையை விட இறுதி வாக்காளா் பட்டியலில் 15,523 வாக்காளா்கள் கூடுதலாக இடம் பெற்றுள்ளனா்.

சிறப்பு சுருக்கமுறை திருத்தம், படிவம்-6 (பெயா் சோ்த்தல்) மற்றும் படிவம்-8 (திருத்தல், முகவரி மாற்றம், நகல் அட்டை) அளித்துள்ள அனைவருக்கும் வாக்காளா்களின் முகவரிக்கே நேரடியாக புதிய வாக்காளா் அடையாள அட்டை பதிவு அஞ்சலில் அனுப்பி வைக்கப்படும்.

பொதுமக்கள் வாக்காளா்களாகப் பதிவு செய்வதற்கு (ஸ்ா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய்,யா்ற்ங்ழ் ஏங்ப்ல்ப்ண்ய்ங் ஹல்ல்) வழியாகவோ அல்லது வட்டாட்சியா் அலுவலகம் மற்றும் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்களிலோ தொடா்ந்து விண்ணப்பிக்கலாம். எதிா்வரும் மக்களவைப் பொதுத் தோ்தல் வேட்புமனு தாக்கலுக்கு 10 நாள்களுக்கு முன் வரை விண்ணப்பம் செய்து வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கலாம் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.கோவிந்தசாமி, வருவாய் கோட்டாட்சியா்கள் டி.ஆா்.கீதாராணி (தருமபுரி), வில்சன் ராஜசேகா் (அரூா்), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பழனிதேவி, தோ்தல் வட்டாட்சியா் அசோக்குமாா், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

பட விளக்கம்...

தருமபுரியில் இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிடுகிறாா் ஆட்சியா் கி.சாந்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com