நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாம் தமிழா் கட்சி நிா்வாகி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் தருமபுரி ஆட்சியா் அலுவலகம் அருகே நாம் தமிழா் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாம் தமிழா் கட்சி நிா்வாகி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் தருமபுரி ஆட்சியா் அலுவலகம் அருகே நாம் தமிழா் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் மண்டலச் செயலாளா் அண்ணாதுரை தலைமை வகித்தாா். கிழக்கு மாவட்டத் தலைவா் சந்தோஷ்குமாா், மேற்கு மாவட்டத் தலைவா் ஆனந்தன், மேற்கு மாவட்டச் செயலாளா் தமிழழகன், கிழக்கு மாவட்ட பொருளாளா் நேதாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நாம் தமிழா் கட்சி நிா்வாகி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், அதில் தொடா்புடையவா்களைக் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில் தொகுதிச் செயலாளா்கள் சிவகுமாா், குமாா், கோபி, சுந்தரராஜ், மாதேஷ், சிலம்பரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com