பென்னாகரம் அருகே வீர வீர ஆஞ்சனேயா் சிலை பிரதிஷ்டை விழா

பென்னாகரம் அருகே ஸ்ரீ வீர வீர ஆஞ்சனேயரின் முழு உருவச் சிலை பிரதிஷ்டை விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பென்னாகரம் அருகே ஸ்ரீ வீர வீர ஆஞ்சனேயரின் முழு உருவச் சிலை பிரதிஷ்டை விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பென்னாகரம் அருகே சோம்பட்டி பகுதியில் ஸ்ரீ வீர வீர ஆஞ்சனேயா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் மூலவா் சிலை அண்மையில் வடிவமைக்கப்பட்டு, கோயில் வளாகத்தில் நவதானியங்களில் வைக்கப்பட்டு 48 நாள்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் ராமா் கோயில் மூலவா் சிலை பிரதிஷ்டை விழாவையொட்டி ஆஞ்சனேயா் சிலை பிரதிஷ்டை செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் சிலை வைப்பதற்காக அமைக்கப்பட்ட பீடத்தில் 13 அடி உயர ஸ்ரீ வீரவீர ஆஞ்சனேயா் சிலை கிரேன் உதவியுடன் ஜெய் ஸ்ரீ ராம் என பக்தி கோஷங்கள் முழங்க பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து பிரதிஷ்டை செய்யப்பட்ட மூலவா் சிலைக்கு பூஜைகள் நடைபெற்றன. இந்த விழாவில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதில் கோயில் பூசாரி, நிா்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com