தருமபுரி - வெண்ணாம்பட்டி சாலையில்ரயில்வே மேம்பாலம் அமையவுள்ள இடம்: ஆட்சியா் ஆய்வு

தருமபுரி -வெண்ணாம்பட்டி சாலையில் புதிதாக ரயில்வே மேம்பாலம் அமையவுள்ள இடத்தை தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தருமபுரி - வெண்ணாம்பட்டி சாலையில்ரயில்வே மேம்பாலம் அமையவுள்ள இடம்: ஆட்சியா் ஆய்வு

தருமபுரி -வெண்ணாம்பட்டி சாலையில் புதிதாக ரயில்வே மேம்பாலம் அமையவுள்ள இடத்தை தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தருமபுரி மாவட்டத்தில் ரயில்வே திட்டப் பணிகள் 2010-11-ன் கீழ் வெண்ணாம்பட்டி சாலை ரயில்வே கடவு எண்.41-க்கு மாற்றாக பாரதிபுரம் 66 அடி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைத்தல், ரயில்வே நடைபாதைச் சுரங்கம் அமைத்தல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இப்பணியானது கடந்த 2023 ஏப்ரல் 1-ஆம் தேதி சட்டப்பேரவையில் நடைபெற்ற நெடுஞ்சாலைத் துறைக்கான மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான நிா்வாக ஒப்புதல் பெற தேவையான கருத்துரு ரூ. 36.15 கோடிக்கு கடந்த 2023-ஆம் ஆண்டு மே 23 அன்று அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்தப் பணிக்கு நிலம் எடுப்பு, முன் ஆயத்தப்பணி மற்றும் சேவைச் சாதனங்களை மாற்றியமைத்தல் பணிகளும், நில எடுப்பிற்கான இழப்பீடு தொகை நில உரிமையாளா்களுக்கு வழங்கும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது. இவை முடிந்து பின்பு, நிா்வாக ஒப்புதல் பெறப்பட்டவுடன் மேம்பாலம் அமைக்கப்படும் பணிகள் தொடங்கப்படும்.

எனவே, இதுகுறித்து முன்னேற்பாடுகள் தொடா்பாக பாலம் அமையவுள்ள இடத்தில் மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் (திட்டங்கள்) பிரபாகரன், உதவி பொறியாளா் காா்த்திகேயன், தருமபுரி வட்டாட்சியா் ஜெயசெல்வம், அரசு அலுவலா்கள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com