நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா

தருமபுரி அருகே சவுளுப்பட்டி மற்றும் பாப்பாரப்பட்டி அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் விடுதலைப் போராட்ட வீரா் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தருமபுரி அருகே சவுளுப்பட்டி மற்றும் பாப்பாரப்பட்டி அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் விடுதலைப் போராட்ட வீரா் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தருமபுரி, சோகத்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட சவுளுப்பட்டியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மன்றம் சாா்பில் அதன் தலைவா் ஏ.அசோகன் தலைமையில் விடுதலைப் போராட்ட வீரா் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில், அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த விழாவில், நேதாஜி மன்றத்தினா், கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல, பாப்பாரப்பட்டி அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் மு.தமிழ்வாணன் தலைமையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில், பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த விழாவில் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com