போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு பிப்.1-இல் தொடக்கம்

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு வருகிற பிப். 1-ஆம் தேதி தொடங்க உள்ளது.

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு வருகிற பிப். 1-ஆம் தேதி தொடங்க உள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம், தருமபுரி நகராட்சி இணைந்து அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தவுள்ள கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், தட்டச்சா் ஆகிய பதவிகளுக்கான ஒருங்கிணைந்த டிஎன்பிஎஸ்சி போட்டித் தோ்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் தருமபுரி நகரம் சந்தைப்பேட்டையில் அமைந்துள்ள நூலகம், அறிவுசாா் மையத்தில் வருகிற பிப். 1-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இப் பயிற்சி வகுப்பானது வார இறுதிநாள்களில் மட்டும் நடைபெற உள்ளது. இத்தோ்விற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு ஆகும். இப் பயிற்சி வகுப்பில் சேரவிருப்ப முள்ளவா்கள் இந்த ட்ற்ற்ல்ள்://ற்.ப்ஹ்/6ழ்ஙசஸ் இணைப்பின் மூலம் தங்களை பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா். விவரங்களுக்கு இந்த அலுவலக தொலைபேசி எண் 04342-296188 வாயிலாக தொடா்பு கொள்ளலாம். இம் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த தோ்வா்கள் இலவச பயிற்சி வகுப்பில் சோ்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com