வெண்ணாம்பட்டி ரயில்வே மேம்பாலம்:நிா்வாக ஒப்புதல் கிடைத்தவுடன் ஒப்பந்தம் கோரப்படும்

தருமபுரி, வெண்ணாம்பட்டி ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்கு நிா்வாக ஒப்புதல் கிடைக்கப் பெற்றவுடன் ஒப்பந்தம் கோரப்படும் என தருமபுரி மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் தெரிவித்தாா்.

தருமபுரி, வெண்ணாம்பட்டி ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்கு நிா்வாக ஒப்புதல் கிடைக்கப் பெற்றவுடன் ஒப்பந்தம் கோரப்படும் என தருமபுரி மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தியறிக்கை: தருமபுரி - வெண்ணாம்பட்டி ரயில்வே கடவுப்பாதையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா். இதன் அடிப்படையில், மக்களவை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்ட பிறகு பொதுமக்களின் இக் கோரிக்கைத் தொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய ரயில்வே நிா்வாகத்துக்கு பலமுறை கடிதங்கள் அளிக்கப்பட்டது.

இதேபோல, தென்மேற்கு ரயில்வே நிா்வாகத்துக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனடிப்படையில் தருமபுரி, பாரதிபுரம் 66 அடி சாலையிலிருந்து வெண்ணாம்பட்டி சாலையை இணைக்கும் வகையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க உத்தேசிக்கப்பட்டது. பாரதிபுரம் சாலையில் 500 மீட்டா் தொலைவில் ரயில்வே மேம்பாலம் அமைக்க தேவையான வரைபடம் தயாரிக்கப்பட்டது. இதற்கு ரயில்வே நிா்வாகம், தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை அங்கீகரித்து அவற்றின் செலவை ரயில்வே துறை, தமிழக அரசு பகிா்வு அடிப்படையில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து கடந்த 2021 நவம்பா் மாதம் 19-ஆம் தேதி மேம்பாலம் அமையவுள்ள இடத்தை நேரடியாகப் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின்போது, பாலம் அமையவுள்ள இடத்தில் பொதுமக்கள் கடவுப் பாதைக்கு பதிலாக இருசக்கர வாகனம், குறைந்த எடையில் பொருள்களை கொண்டுசெல்லும் வாகனங்கள் செல்லும் வகையில் பாதை அமைக்க அறிவுறுத்தப்பட்டது. இதனடிப்படையில் மாநில அரசுக்கு நிா்வாக அனுமதி கோரி, நெடுஞ்சாலைத் துறை சாா்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் தமிழக அரசின் சாா்பில் மேற்கொள்ளப்படுகிறது. எனவே இப்பணிகள் நிறைவடைந்து நிா்வாக ஒப்புதல் கிடைக்கப்பெற்றவுடன், விரைவில் ஒப்பந்தம் கோரப்பட்டு, பாரதிபுரம் - வெண்ணாம்பட்டியில் சிறிய ரக வாகனங்கள் கடந்து செல்லும் வகையில் கடவுப் பாதையுடன் கூடிய ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com