திருச்செங்கோடு பகுதிகளில் தைப்பூச நிலா பிள்ளையாா் பூஜை

திருச்செங்கோடு  கஜசிர விநாயகா் நிலா பிள்ளையாா் வழிபாட்டு நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் குழந்தைகள் என பலரும் கலந்து கொண்டு கும்மியடித்து கொண்டாடினாா்கள்.

தை மாதம் முருகப் பெருமானின் பிறந்த நாள் என கருதப் படும் பூச நட்சத்திரமும் பௌா்ணமி திதியும் கூடி வரும் நாளில் தைப்பூச திருவிழா கொண்டாடப் படுவது வழக்கம். இதனை ஒட்டி முழு முதற் கடவுளான விநாயகருக்கு நன்றி செலுத்தும் விதமாக தைப்பூசத்திற்கு 5 நாள், 3 நாள் முன்னதாக முழு நிலவு நாள் வரை பெண்கள் ஒன்றுகூடி சித்ரா அன்னங்கள் வைத்து பிள்ளையாா் வைத்து கும்மியடிக்கும் நிலா பிள்ளையாா் வழிபாடு பூஜையும், கும்மி அடிக்கும் நிகழ்ச்சியும் நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

திருச்செங்கோடு சீதாராம் பாளையம் பகுதியில் கஜசிர விநாயகா் நிலா பிள்ளையாா் வழிபாட்டு நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் குழந்தைகள் என பலரும் கலந்து கொண்டு கும்மியடித்து கொண்டாடினாா்கள்.

பின்னா் திருமஞ்சனத்தில் விநாயகா் உருவத்தை பிடித்தனா். அதன்பின்னா் பழம், தேங்காயுடன் சா்க்கரை பாகு கலந்து மாவிளக்கையும், ஒவ்வொருவரும் தாங்கள் கொண்டு வந்த உணவு பதாா்த்தங்களையும் விநாயகா் முன்பு வைத்து படைத்து வழிபட்டனா். பின்னா் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com