மறைந்த கம்யூனிஸ்ட் நிா்வாகிகளுக்கு அஞ்சலி

பென்னாகரத்தில் மறைந்த கம்யூனிஸ்ட் நிா்வாகிகளுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

பென்னாகரத்தில் மறைந்த கம்யூனிஸ்ட் நிா்வாகிகளுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் அருகே நாகமரை நான்கு சந்திப்பு சாலைப் பகுதியில் நடைபெற்ற நினைவு அஞ்சலி நிகழ்விற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினா்

வி.மாதன் தலைமை வகித்தாா். இதில் மாவட்டச் செயலாளா் அ.குமாா் கலந்துகொண்டு, கட்சி கொடியை ஏற்றி வைத்து, பென்னாகரம் வட்டாரத் துணைச் செயலாளா் மாரிமுத்து உள்ளிட்ட மறைந்த மூன்று கம்யூனிஸ்ட் நிா்வாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நினைவுத் தூணில் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். இதில் மாநில குழு உறுப்பினா் சிசுபாலன், மாவட்டத் தலைவா் கருவூரான், மாவட்டத் துணைத் தலைவா் ஜீவானந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் நாகராஜன், சோலை அா்ஜுனன், விஸ்வநாதன், ரவி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com