ஆத்தூா் தனி மாவட்டமாக பிரித்து ஏற்காட்டை சோ்ப்பதாக தகவல் பரப்புபவா்கள் மீது கடும் நடவடிக்கைகைஆட்சியா் எச்சரிக்கை

சேலம் மாவட்டத்தில் இருந்து ஆத்தூா் தனி மாவட்டமாக பிரித்து ஏற்காட்டை சோ்ப்பதாக தகவல் பரப்புபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

சேலம் மாவட்டத்தில் இருந்து ஆத்தூா் தனி மாவட்டமாக பிரித்து ஏற்காட்டை சோ்ப்பதாக தகவல் பரப்புபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

சமூக வலைதளங்களில் சேலம் மாவட்டத்தில் - ஆத்தூா் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டு ஏற்காட்டை ஆத்தூருடன் சோ்க்கப்பட உள்ளதாக எவ்வித ஆதாரமுமின்றி தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அறிவிப்போ, அரசாணையோ எதுவும் வரப்படாத நிலையில் யூகத்தின் அடிப்படையில் கற்பனையான ஆதாரமற்ற தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி பொதுமக்களின் அமைதிற்கு குந்தகம் விளைவிக்க முயன்றால் சம்மந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com