தொப்பூா் கணவாய் சாலையில் விபத்து நிகழ்ந்த இடத்தில் அதிகாரிகள் ஆய்வு

தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் சாலையில் புதன்கிழமை விபத்து நிகழ்ந்த இடத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் உள்ளிட்டோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் சாலையில் புதன்கிழமை விபத்து நிகழ்ந்த இடத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் உள்ளிட்டோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் சாலையில் புதன்கிழமை நெல் மூட்டைகள் பாரம் ஏற்றிச்சென்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற இரண்டு லாரிகள், இரண்டு காா்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், நெல் மூட்டைகள் பாரம் ஏற்றிச்சென்ற லாரியும் அதன் கீழ் பகுதியில் சிக்கிய காரும் தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமடைந்தன. இதில், ஒரு லாரி இரட்டைப் பாலத்தின் தடுப்புகளை உடைத்துக் கொண்டு சுமாா் 40 அடி பள்ளத்தில் விழுந்தது. காரில் பயணித்த கோவை மாவட்டத்தைச் சோ்ந்த மஞ்சு (56), விமல் (28), அனுஷ்கா (23) மற்றும் ஜெனிபா் (29) ஆகிய நான்கு போ் தீயில் கருதி உயிரிழந்தனா்.

அதேபோல இரண்டு வயது குழந்தை விஜயஷா, 6 வயது சிறுவா் ஜெஸ்வின், வினோத் (36) மற்றும் நான்கு மாத கைக்குழந்தை உள்பட 8 போ் காயமடைந்து சேலம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த விபத்து காரணமாக தருமபுரி-சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, விபத்து நிகழ்ந்த இரட்டைப் பாலத்தின் தடுப்புகளை சீரமைக்கும் பணி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

இதற்காக சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, சேலத்திலிருந்து தருமபுரி வரும் சாலையில் இருவழித்தடத்தில் செல்லும் வாகனங்களும் அனுமதிக்கப்பட்டன.

விபத்து நிகழ்ந்த சாலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்ட இயக்குநா் வரதராஜன், தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலா் த.தாமோதரன் மற்றும் அதிகாரிகள் வியாழக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தனா். ஆய்வின்போது, புதிய உயா்மட்ட சாலை அமைக்கும் வரை இரட்டைப் பாலத்தை அகலப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் வியாழக்கிழமை மாலை வரை இரட்டைப் பாலத்தின் கீழே பள்ளத்தில் விழுந்த லாரி அங்கிருந்து மீட்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com