பாப்பாரப்பட்டியில் தைப்பூச திருவிழா

பாப்பாரப்பட்டி, சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
பாப்பாரப்பட்டியில் தைப்பூச திருவிழா

பாப்பாரப்பட்டி, சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

பாப்பாரப்பட்டி, பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள புதிய சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாள்களில் ஆட்டுக்கிடா வாகனம், குதிரை வாகனம், சிம்ம வாகனம், பூத வாகனங்களில் சுவாமி எழுந்தருளினாா். சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அக்னி குண்டம் இறங்குதல் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பக்தா்கள் காவடியுடன் தீ மிதித்து நோ்த்திக் கடன் செலுத்தினா். அதைத் தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானை சமேதராக சுப்பிரமணிய சுவாமி அருள்பாலித்தாா். தொடா்ந்து சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா் ஞானசேகரன், விழா குழுவினா், செங்குந்தா் சமுதாயத்தினா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com