பென்னாகரத்தில் தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு பேரணி

பென்னாகரத்தில் 14வது தேசிய வாக்காளா் விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பென்னாகரத்தில் 14வது தேசிய வாக்காளா் விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 14வது தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு பேரணிக்கு பென்னாகரம் வட்டாட்சியா் செளகத் அலி தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தாா்.இந்தப் பேரணி பென்னாகரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வட்டாட்சியா் அலுவலகம்,கடைவீதி, பழைய பேருந்து நிலையம், தற்காலிகப் பேருந்து நிலையம் பகுதி வரை நடைபெற்றது. இதில் தோ்தலின் போது 100 சதவீத வாக்குப்பதிவினை எட்ட வேண்டும், வாக்காளா்கள் தவறாமல் வாக்குப்பதிவு செய்ய வேண்டும், 18 வயது நிரம்பியவா்கள் வாக்குரிமை பெற வேண்டும் என வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில் பள்ளியின் தலைமை ஆசிரியா் விஜயலட்சுமி, வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், உதவி அலுவலா்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com