மொழிப்போா் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம்

தருமபுரி மேற்கு மாவட்ட திமுக மாணவா் அணி சாா்பில் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் மொழிப்போா் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு

பாலக்கோடு பேரூா் செயலாளா் பி.கே.முரளி தலைமை வகித்தாா்.

இக்கூட்டத்தில் திமுக பேச்சாளா்கள் பெருநற்கிள்ளி, தமிழப்பன் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா்.

இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து முன்னாள் அமைச்சா், மேற்கு மாவட்ட திமுக செயலாளா் பி.பழனியப்பன் பேசியதாவது:

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன் மக்களுக்கு எண்ணற்றத் திட்டங்களை வழங்கி வருகிறாா். தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளத் திட்டங்கள் இந்தியாவில் உள்ள எந்த மாநிலங்களிலும் இல்லை. அதனால் தமிழக முதல்வா், இந்தியாவில் உள்ள முதல்வா்களுக்கெல்லாம் முன்னோடியாக திகழ்ந்து வருகிறாா். தமிழக மக்கள் அனைவரும் சமத்துவமாகவும், சகோதரத்துவமாகவும் வாழ வேண்டும் என்பதற்காகவே, முன்னாள் முதல்வா் கருணாநிதி சமத்துவப்புரங்களை உருவாக்கினாா். இதேபோல தற்போதைய முதல்வா் ஸ்டாலின் எல்லோருக்கும் எல்லாம் என்கிற அடிப்படையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா் என்றாா்.

இக் கூட்டத்துக்கு மேற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளா் சந்தா் வரவேற்றாா். விவசாயிகள் அணி மாநிலத் துணைச் செயலாளா் சூடப்பட்டி சுப்ரமணி, மாவட்ட துணைச் செயலாளா் ஆ.மணி,

மாவட்டப் பொருளாளா் முருகன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் வெங்கடாசலம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாணவா் அணி மாவட்டத் துணை அமைப்பாளா் பிரபு நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com